நிதி டிஜிட்டல் நிறுவனத்தின் 24 மணி நேர ஆடியோ இணையத்தள சேவை துவக்கம்!
நிதி டிஜிட்டல் நிறுவனம் இன்று NWR லைவ் என்ற 24 மணி நேர ஆடியோ இணையத்தள சேவையை துவக்கியுள்ளது.
http://www.nwrlive.com என்ற இந்த இணையத்தளத்தில் செய்திகள், கருத்துரையாடல்கள், இசை உள்ளிட்டவை நேரடியாக ஒலிபரப்பாகும்.

இந்த இணையத்தளத்தின் ஆடியோ சேவையை மொபைல்களிலும் கேட்கலாம். இந்தத் தளம் இன்று காலை 7 மணிக்கு தனது சேவைத் துவக்கியது முதலே டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் இதன் அட்டகாசமான தரம் குறித்த கருத்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்த இணையத்தின் துவக்க நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேயர்களிடையே பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ், இந்தத் தளம் தேசப் பற்று கொண்ட தேசிய உணர்வாளர்களுக்கு பெரும் வரப் பிரசாதம் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மூத்த பாஜக தலைவரும் ராஜ்யசபா எம்பியும் பயோனீர் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர் சந்தன் மித்ரா, இந்தியாவில் ஊடகங்களின் பல பரிமாண வளர்ச்சி குறித்தும், தனது அனுபவங்கள் குறித்தும் பேசினார். மேலும் NWR Live இந்தியாவின் முதல் சுதந்திரமான ஆடியோ தளம் என்றார்.
பிரபல வலதுசாரி கட்டுரையாளராள அசோக் மாலிக் மற்றும் சந்திரா ஜெயின் ஆகியோர் என்டபிள்யூஆர் குழுவினரின் இந்தப் புதிய ஆடியோ கமெண்ட்ரி முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான மீனாட்சி லேகியும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
நிதி டிஜிட்டல் நிறுவனரான ராஜேஷ் ஜெயின் பேசுகையில், டிஜிட்டல் மீடியாவின் பரிமாண வளர்ச்சியில் என்டபிள்யூஆர் லைவ் புதிய மைல்கல் என்றார்.
நிதி டிஜிட்டல் நிறுவனத்தின் ஆசிரியர் குழு இயக்குனரான கஞ்சன் குப்தா, நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்றார். இந்த முயற்சி ஊடக உலகில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவது உறுதி என்றார்.
இந்த இணையத்தின் முகவரி: http://www.nwrlive.com
இதை மொபைல் போன்களிலும் கேட்கலாம்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications