ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்கத் தலைவர் தேர்தலில் தோற்றார் சுரேஷ்கல்மாடி!
புனே: டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்கத் தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். கல்மாடியை எதிர்த்துப் போடிட்யிட்ட கத்தார் அத்லெட்டிக்ஸ் சங்கத்தின் தலைவர் தல்ஹாம் அல் ஹமாத் வெற்றி பெற்றுள்ளார்.

ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்கத்தின் தலைவராக 2000ஆம் ஆண்டு சுரேஷ்கல்மாடி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009ஆம் ஆண்டு 3வது முறையாகவும் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 4வது முறையாக பதவியை தக்க வைத்துக் கொள்ள தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்கத்தின் மூத்த துணைத் தலைவரான கத்தார் நாட்டின் தல்ஹாம் அல் ஹமாத் போட்டியிட்டார். மொத்தம் 45 நாடுகளின் அத்லெட்டிக்ஸ் சங்க பிரதிநிதிகள் வாக்களித்த இத்தேர்தலில் சுரேஷ் கல்மாடி தோல்வியைத் தழுவினார். கத்தாரின் தல்ஹாம் அல் ஹமாத் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுரேஷ்கல்மாடி வசம் இருந்தது இந்த ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்கத் தலைவர் பதவி மட்டும்தான். இப்போது அதுவும் பறிபோய்விட்டது.












Click it and Unblock the Notifications