2010ல் 35, 2011ல் 7, 2012ல் 18... இது ஆந்திராவில் பசி, பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை
ஹைதராபாத்: கடந்த ஆண்டு மட்டும் ஆந்திராவில் 18பேர் உணவின்றி பட்டினியால் இறந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே கடந்த ஆண்டு பட்டினிச் சாவு நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது. அதில் ஆந்திராவில் மட்டும் கடந்த ஆண்உ 18 பசியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தின் கணக்குப்படி, ஹைதராபாத்தில் மட்டும் 6 பேர் பசியால் இறந்திருக்கிறார்களாம். ஆனால், ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் எந்த பட்டினிச்சாவும் கடந்த சில ஆண்டுகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையா? பொய்யா?
ஆந்திர அரசாங்கமோ இதெல்லாம் பொய் கணக்கு, அப்படி பட்டினிச்சாவு எதுவும் இல்லை என மறுத்து வருகிறது.

மாறி வரும் பட்டினிச் சாவுகள்...
தேசிய குற்றப்பதிவு ஆணையக் கணக்கீட்டின் படி, 2011ல் ஏழு பேரும், 2010ல் 35 பேரும் ஆந்திராவில் பட்டினிச் சாவு அடைந்ததாக ஆதாரம் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் மட்டும் 187 பேர் ஆந்திராவில் பட்டினிச்சாவு அடைந்ததாக பதிவாகியுள்ளது.

என் கவனத்திற்கு வரவில்லை...
ஆனால், ஆந்திர நிதியமைச்சர் ரகுவீர ரெட்டியோ இதை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் மாநிலத்தில் பட்டினி சாவிற்கு வாய்ப்பேயில்லை. பட்டினிச் சாவுகள் குறித்து இதுவரை எதுவும் என் கவனத்திற்கு வரவில்லை' என தெரிவித்துள்ளார்.

நிறைய திட்டங்கள் உள்ளன...
மேலும், ‘அப்படியே இந்தச் செய்தி உண்மையானால், பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும். ஆனால், அவ்வாறு பட்டினிச் சாவுகள் ஏற்படா வண்ணம் ஏற்கனவே அரசு நிறைய திட்டங்களாஇ அமுல் படுத்தியுள்ளது ‘என்றார்.

பட்டினிச் சாவு என்றால்...
பிரேதப் பரிசோதனையில் இறந்த ஒருவரின் வயிற்றில், கடந்த இரண்டு வாரங்களாக உணவு உட்கொள்ளாததற்கான ஆதாரம் இருந்தால், அது பட்டினிச்சாவாக கணக்கில் கொள்ளப்படும். மேலும், இத்தகைய பட்டினிச் சாவுகளுக்கு அம்மாநில கலெக்டர்களே பொறுப்பு என்கிறது உச்சநீதிமன்ற உத்தரவு.

கண்டனக் குரல்கள்...
ஆந்திராவில் பட்டினிச்சாவுகள் இல்லை என அரசு மறுத்த போதும், சமூக ஆர்வலர்கள் ‘இது உண்மையென்றால் இதைவிட கேவலமான நிர்வாகம் வேறொன்றுமில்லை' என கருத்து தெரிவித்த வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications