பசில் இங்கிட்டு வர்றாராம்.. சிவசங்கர் மேனன் அங்கிட்டு போறாராம்!

Subscribe to Oneindia Tamil

Basil Rajapaksa
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் அடுத்த வாரம் கொழும்பு போகிறார். அதேசமயம், ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே 4ம் தேதி டெல்லி வருகிறார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அமைச்சராக இருக்கிறார் பசில். இவர் ஜூலை 4ம் தேதி டெல்லி வருகிறார். ராஜபக்சேவின் சிறப்புப் பிரதிநிதியாக இவர் டெல்லி வருகிறார்.

3 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கப் போகிறார் பசில். அந்த சமயத்தில் தனது நாட்டு அரசியல் சூழல் குறித்து இந்தியத் தலைவர்களுடன் அவர் விவாதிப்பார் என்று தெரிகிறது.

இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிக அதிகாரம் தர வகை செய்யும் 13வது சட்டத் திருத்தத்தை ஒழித்துக் கட்ட மும்முரமாக உள்ளது. இதற்கு இந்தியத் தரப்பில் லைட்டாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பசில் இந்தியா வருகிறார்.

2 வாரங்களுக்கு முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் டெல்லி வந்து இந்தியத் தலைவர்களைச் சந்தித்து 13வது சட்டத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை அரசு செயல்படுவது குறித்து தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

1987ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்முக்கிய ஷரத்தே இந்த 13வது சட்டத் திருத்தம்தான். இது தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்கிறது. ஆனால் இதை சிங்களர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பசில் தனது வருகையின்போது வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மேனன் ஆகியோரைச் சந்திப்பார்.

அதேபோல ஜூலை 7ம் தேதி மேனன் கொழும்பு செல்கிறார். அவர் அங்கு போய் என்ன பேசுவார் என்பது குறித்து விரிவான தகவல் இல்லை. இருப்பினும் 13வது சட்டத் திருத்தம் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+