ட்விட்டரில் மோடியுடன் மோத களம் இறக்கப்பட்ட சஷி தரூர்!!

மோடியை விட சற்றே கூடுதலாக 1,819, 542 பாலோயர்களைக் கொண்டவர் மத்திய அமைச்சர் சஷி தரூர். பாஜகவினரை குறிப்பாக நரேந்திர மோடி பதிவிடும் ட்விட்டர் கருத்துகளுக்கு முதல் பதிலடி இனி சஷி தரூரிடம் இருந்தே வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கட்டளை பிறப்பித்திருக்கிறதாம். சஷி தரூரின் சகாவாக எம்.பி. தீபேந்தர் ஹூடாவையும் காங்கிரஸ் களம் இறக்கிவிட்டிருக்கிறதாம்.
அண்மையில் உத்தர்காண்ட் வெள்ளம் தொடர்பாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தீவிரமாக ட்விட்டரில் மோதிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து எல்லோரும் போய் ட்விட்டரில் கருத்து சொல்ல வேண்டும் என்று நேற்று சொல்லியிருந்தது காங்கிரஸ். ஆளுக்கு ஒரு கருத்தை சொல்வதற்கு பதிலாக பொறுப்பாக இரண்டு பேர் ட்விட்டரிலேயே குடி இருந்து கருத்து சொல்லட்டும் என்று களமிறக்கிவிட்டிருக்கிறது காங்கிரஸ்..
ட்விட்டரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காதே!












Click it and Unblock the Notifications