குஜராத் பஞ்சாயத்து தேர்தல். பாஜக அபார வெற்றி! காங்கிரஸ் படுதோல்வி!!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஜில்லா மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களில் பாரதிய ஜனதா அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வசம் தொகுதி பல பஞ்சாயத்துகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
குஜராத்தின் ஜில்லா பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் சபர்கந்தா, மெக்ஷானா மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் நடைபெற்றது. 3 ஜில்லா பஞ்சாயத்துக்கான தேர்தல்களில் 3 இடங்களையுமேயே பாஜக கைப்பற்றியுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் வசம் இரண்டு பஞ்சாயத்துகளும் பாஜக வசம் ஒரே ஒரு பஞ்சாயத்துமே இருந்தது.
இதேபோல் வல்சாத், சூரத், தபி, பரூச், வதோரா, பஞ்சமால், தஹோட், ஆனந்த், காந்திநகர், சபர்கந்தா, ராஜ்கோட், ஜூனாகத் மாவட்டங்களில் 19 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 12 இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ளது. 7 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை இந்த 19-ல் 15 காங்கிரஸ் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications