புதிய வெளியுறவுத் துறைசெயலராக சுஜாதா சிங் நியமனம்!

மத்திய வெளியுறவுத் துறை செயலரான ரஞ்சன் மத்தாய் பதவிக் காலம் ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வெளியுறவுத் துறைச் செயலர் யார் என்ற யூகங்கள் எழுந்தன. சீனாவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கரை வெளியுறவுச் செயலராக பிரதமர் நியமிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியுறவுத் துறையில் பணிமூப்பு அடிப்படையில் பலர் இருக்க அவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதேபோல் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஜைமினி பகவதி, மேற்கு பிராந்திய செயலர் சுதிர் வியாஸ், வெளியுறவு அமைச்சக பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி ஆகியோரது பெயர்களும் புதிய வெளியுறவு செயலர் பதவிக்கு அடிபட்டன.
இந்நிலையில் ஜெர்மனுக்கான இந்திய தூதர் சுஜாதாசிங்கை புதிய வெளியுறவுத் துறை செயலராக நியமித்து பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பிறந்த ராஜேஸ்வர் மகள் சுஜாதா சிங்!
ஐபி எனப்படும் புலனாய்வு அமைப்பின் தலைவரும் சிக்கிம், மேற்குவங்கம், உத்தரபிதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் பதவி வகித்தவர் டி.வி. ராஜேஸ்வர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பிறந்த ராஜேஸ்வர் மகள்தான் சுஜாதா சிங். ராஜேஸ்வரின் 60வது ஆண்டு திருமண நிகழ்ச்சியில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டிருந்தார். சுஜாதாசிங்கின் கணவர் சஞ்சய்சிங், வெளியுறவுத் துறையில் கிழக்கு பிராந்திய செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications