உத்தர்காண்ட்.. மீட்கப்படாத 700 பேர்.. “உயிரிழந்தவர்களாக” அறிவிக்க மாநில அரசு முடிவு!
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்க மீட்கப்படாத 700 பேர் ஒரு மாதத்துக்குள் கண்டறியாவிட்டால் மரணம் அடைந்ததாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்தர்காண்ட் மாநிலம் இதுவரை கண்டிராத பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. இமயமலையின் புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி என அனைத்துமே பேரழிவை சந்தித்தன. கேதர்நாத் முற்றிலும் சிதையுண்டு போய் கைவிடப்பட்ட நகரமாக உருமாறிக் கிடக்கிறது. பத்ரிநாத்தில் பத்ரிநாத்தில் 300 பக்தர்களும், 600 உள்ளூர் மக்களும் சிக்கித்தவித்தனர். அவர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர்கள் விரைந்தன. ஆனால் 220 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. மீதி 680 பேர் இன்னும் அங்கேயே சிக்கித்தவிக்கின்றனர்.

நிலத்தில் புதைந்து கிடக்கும் பிணங்களை தோண்டி எடுக்க உத்தரகாண்ட் மாநில அரசு, 200 மருத்துவ நிபுணர்கள், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரை அனுப்பி வைத்திருந்தது. பிணங்களில் இருந்து மரபணு மாதிரிகளை எடுக்க சென்றிருந்த மருத்துவ குழுவினர் நோய்வாய்ப்பட்டு திரும்பி விட்டனர்.கேதார்நாத் கோவில் பகுதியில் பிணங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன. அதனால் அங்கு காற்றில் பிண நாற்றம் பரவி உள்ளது.
பத்ரிநாத், கேதர்நாத் போன்ற புனிதத்தலங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தபோது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். எனவே, ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளர்களும், அவரவர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யார் யார் இன்னும் திரும்பி வரவில்லை என்று சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.அப்படி, ஒரு மாதம் ஆகியும் இருப்பிடம் கண்டறியப்படாதவர்களை ‘மரணம்' அடைந்ததாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications