ஐஐஎம் பெங்களூர் மாணவர்கள் இருவருக்கு ரூ.1 கோடி சம்பளம்: அமேசான் அசத்தல்

பெங்களூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மொத்தம் 74 மாணவ, மாணவியர் ஓராண்டு கால படிப்பான எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ. படிக்கின்றனர். இந்நிலையில் 55 நிறுவனங்கள் இந்த மாணவர்களுக்கு வேலை கொடுக்க கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. அதில் 2 மாணவர்களுக்கு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் வேலை கிடைத்துள்ளது.
அவர்கள் இருவருக்கும் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம். இந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் ரூ.25 லட்சம் தான் மிதமான சம்பளமாக இருந்தது. இது தவிர எஸ்பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச்சில் ஓராண்டு எம்.பி.ஏ. படிக்கும் மாணவருக்கு ரூ.40.5 லட்சம் சம்பளம் கிடைக்கும் வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த படிப்பு படித்த மாணவர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.28.5 லட்சம் ஆகும்.
ஐஐஎம் பெங்களூர் எக்சிகியூட்டிவ் படிப்பில் சேர 7 முதல் 15 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் வேண்டும் என்ற விதி இருந்தது. இந்நிலையில் 5 முதல் 15 ஆண்டு அனுபவமுள்ளவர்கள் இந்த படிப்பில் சேரலாம் என்று அந்நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications