என்.எல்.சி. பங்கு: தமிழக அரசின் கோரிக்கை…. மத்திய அரசு 'செபி'க்கு பரிந்துரை!
டெல்லி: என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்கலாம் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து 'செபி' க்கு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமான என்.எல்.சி. யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்து, அமைச்சரவையிலும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் என்.எல்.சி. பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமே விற்கலாம் என்றும், அதனை தனியார் நிறுவனத்திடம் விற்க கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்கலாம் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து 'செபி' க்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அவ்வாறு விற்க முடியுமா என 'செபி'யின் கருத்தை கேட்டுள்ளதாகவும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் பிரதமருக்கு அந்த கடிதத்தினை எழுதியுள்ளார். எனினும் என்.எல்.சி பங்குகளை தமிழகத்திற்கு கேட்டுள்ளதாக செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். எனவே முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை மத்திய அரசு கவனமுடன் பரிசீலித்து வருவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications