மயிலுக்கு விஷம்.. 11 மயில்கள் பலி.. மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள இ. மலம்பட்டி கிராமத்தில் விஷம் வைத்து பல மயில்கள் கொல்லப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
மயில் நமது தேசியப் பறவை. அதை வேட்டையாடுவது, வளர்ப்பது உள்ளிட்ட செயல்கள் குற்றச் செயலாகும். இந்த நிலையில் ஆங்காங்கு மயில்களைக் கொல்வது அதிகரித்து வருகிறது. பயிர்களுக்கு அது சேதத்தை ஏற்படுத்துவதால் விஷம் வைத்துக் கொன்று விடுகிறார்கள்.
இந்த நிலையில் இ.மலம்பட்டி கிராமத்தில் மயில்கள் சில விஷம் வைத்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகப் பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன. இவை அருகில் உள்ள வயல்களில் புகுந்து நெற்கதிர்களை கொத்திக் குதறி விடுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சில மயில்கள் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் மாணவர்கள் கூறினர். அவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
11 மயில்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது நெல்லில் விஷம் கலந்து கொடுத்து மயில்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து யார் விஷம் கலந்த நெல்லை போட்டது என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications