விளையாட்டு விபரீதமானது: 2 வயது தங்கையைச் சுட்டுக் கொன்ற 5 வயது அண்ணன்
நியூயார்க்: அமெரிக்காவில் விளையாட்டாய் தாத்தாவின் துப்பாக்கியால், 5 வயது சிறுவன் ஒருவன் தனது 2 வயது தங்கையைச் சுட்டதில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.
அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்துவரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டிருந்திருக்கிறார்.அவரது 5 வயது பேரனும், 2 வயது பேத்தியும் அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த தாத்தா, இடையில் வேறு வேலை காரணமாக உள் அறைக்குச் சென்றுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேரன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான்.
எதிர்பாராத விதமாக ட்ரிக்கரில் கை பட்டு விட, அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவனது தங்கையின் முகத்தில் பாயந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவள் பரிதாபமாக பலியானாள்.
மேலை நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெரியவர்களின் அஜாக்கிரதையாலேயே இத்தகைய உயிர் பலிகள் ஏற்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications