Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்எல்சி ஊழியர் ஸ்டிரைக்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Subscribe to Oneindia Tamil

Madras HC stays NLC strike
சென்னை என்எல்சி நிறுவன ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்தப் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் இந்த முடிவுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசின் முடிவுக்கு எதிராக போராடி வரும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை என்எல்சி நிறுவன நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தது. அதில், என்.எல்.சி. நிறுவனத்தில் 17,000 பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இது அரசின் இறுதி முடிவாகும். என்.எல்.சி. மட்டுமல்ல, அனைத்து பொதுத்துறை நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தாலும், மத்திய அரசிடம் 88 சதவீத பங்குகள் கைவசம் இருக்கும். பங்குகளை தனியாரிடம் விற்பனை செய்வதால் என்.எல்.சி.யின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படாது. இந்த விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி.யின் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.பொறியாளர் சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்கள் போராட்டத்தில் குதித்தால், என்.எல்.சி.யின் சுரங்கப்பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுவிடும். இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஊழியர்கள், அதிகாரிகள் பலர் விரும்பவில்லை. ஆனால் வன்முறை, அச்சுறுத்தல்களுக்கு பயந்து அவர்கள் வேலைக்கு வராமல் இருந்துவிட வாய்ப்புள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஊழியர்கள் போராட வேண்டும் என்றால், 15 நாட்களுக்கு முன்னதாக நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.அந்த வகையில் 25.6.13 அன்று வேலை நிறுத்தம் குறித்த நோட்டீசை நிர்வாகத்திடம் தொழிற்சங்கங்கள் கொடுத்தன. ஆனால் அதில் போராட்ட தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அதை முறையான நோட்டீசாக கருத முடியாது.

அதை நோட்டீசாக கருதினாலும், நோட்டீஸ் கால அளவு 15 நாட்களுக்கு உள்ளாகவே உள்ளது. மற்றொரு தொழிற்சங்கம் ஜூலை 3-ந் தேதியில் இருந்து போராட்டத்தில் குதிக்கப்போவதாக ஜூன் 24-ந் தேதி நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், இதுவும் சட்டப்படியான நோட்டீஸ் கால அளவில் இல்லை.எனவே, சட்டவிதிகளை பின்பற்றாமல் அவற்றை மீறி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க முயன்றுள்ளன. போராடும் உரிமை அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் அது அடிப்படை உரிமை இல்லை. எந்த உரிமையை கோர வேண்டும் என்றாலும், சட்டத்துக்கு உட்பட்டுதான் போராட வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடுவோர், இந்த போராட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, வாயிற்பகுதி கூட்டங்களை நடத்தி இருக்கின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைக்கு வரக்கூடிய ஊழியர்கள், வாயிற்பகுதியில் தடுக்கப்படலாம். வெளியில் இருந்து ஊழியர்களை கொண்டு வரவும் முடியாது.என்.எல்.சி. அருகே போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு உரிமை இல்லை.

வேலைக்கு வரும் ஊழியர்களையும், எந்திரங்களை கொண்டு வருவதையும் தடுக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.எனவே இந்த தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் பொதுநலன் பாதிக்கப்படும். இது நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும். எனவே என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று 17 தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து என்எல்சி சார்பில் அவசரம் அவசரமாக அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது.

இதை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. மனுவைவிசாரித்த நீதிபதிகள் அவசர உத்தரவைப் பிறப்பித்தனர்.

அதில்-

என்.எல்.சி. பங்கு விற்பனை விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் 17 தொழிற்சங்கங்களும் 3-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்துள்ளன.

என்.எல்.சி. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணி, பெஞ்சமின் ஜார்ஜ் ஆகியோர், தொழிற் தாவா சட்ட பிரிவுகளை பின்பற்றாமல் போராட்டங்களில் ஈடுபட முடியாது என்று கூறி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றை தாக்கல் செய்தனர்.

மேலும், இந்த போராட்டத்தை அனுமதித்தால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும், தமிழகத்துக்கு தேவையான 580 மெகாவாட் மின்சாரத்தை என்.எல்.சி.தான் வழங்குகிறது என்றும் மாசிலாமணி வாதிட்டார்.தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அது பொதுமக்களை மிகவும் பாதித்துவிடும் என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, என்.எல்.சிக்கும் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என்றும், சுரங்கங்களில் தொடர்ந்து தண்ணீர் எடுக்காமல் விட்டுவிட்டால், அங்கு அதிகமாக தண்ணீர் தேங்கி அனைத்தும் பாழாகிவிடும் என்றும் வாதிட்டனர்.

ஒட்டுமொத்த நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் வரை, 3-ந் தேதி நள்ளிரவில் இருந்தோ அல்லது வேறு தேதியில் இருந்தோ, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு 17 தொழிற்சங்கங்களுக்கும் தடை விதிக்கிறோம்.

இந்த அப்பீல் வழக்கில் 17 தொழிற்சங்கங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் நேற்று நள்ளிரவு ஊழியர்கள் சார்பில் போராட்டம் தொடங்கப்பட்டது. அதேசமயம், இன்று ஊழியர்கள் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+