இளவரசன் மரணம் எதிரொலி - தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

தர்மபுரி மாவட்டம் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும், நாய்க்கன்கொட்டாயைச் சேர்ந்த இளவரசனும் ஜாதி எதிர்ப்புகளை மீறி வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டனர்.
இந்த காதல் கலப்புத் திருமணத்தால் மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 3 கிராமங்கள் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும் வன்முறையில் இறங்கி கிராமங்களை சூறையாடி விட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தக் காதல் ஜோடியைப் பிரிக்க ஒரு பிரிவு கடுமையாக முயற்சித்து அதில் கடைசியில் வெற்றியும் கண்டு விட்டது. சென்டிமென்ட் மூலம் திவ்யாவின் மனதை மாற்றி, நான் தாயுடன்தான் இருப்பேன். என்னால் இளவரசனுடன் வாழ முடியாது என்று சொல்ல வைத்து விட்டனர்.
இதனால் மனம் உடைந்த நிலையில் சென்னையிலிருந்து தர்மபுரி திரும்பினார் இளவரசன். இந்த நிலையில் இன்று காலை அவர் தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தலை சிதறிக் கிடந்தது.
இந்த திடீர் மரணத்தால் பெரும் அதிர்ச்சி அலைகள் எழுந்துள்ளன. தர்மபுரியில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸ் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லில்லி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காவல்துறையும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications