எதியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர்க்க மோடி முயற்சி: அத்வானி கடும் எதிர்ப்பு

இதில் கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர்க்க வேண்டும் என்று நரேந்திர மோடி பரிந்துரை செய்தார். ஆனால், இதை ஏற்க அத்வானி மறுத்துவிட்டார். எக்காரணம் கொண்டும் எதியூரப்பாவுடன் சமரசமே கூடாது, அவரை கட்சியில் மீண்டும் சேர்க்கவே கூடாது என்று அத்வானி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் உள்ளதால், அந்தக் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டால் வரும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்று நரேந்திர மோடி கூறியதை அத்வானி ஏற்க மறுத்துவிட்டார்.
ஊழல்வாதியை கட்சியில் சேர்த்து தேர்தலில் வெல்வதைவிட பேசாமல் தோல்வியடைந்துவிட்டே போகலாம் என்று அத்வானி கூறியதாகத் தெரிகிறது.
ஆனால், அத்வானியின் எதிர்ப்பையும் மீறி விரைவில் எதியூரப்பாவை சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எதியூரப்பாவும் மோடிக்கு ஆதரவான நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் தலைவருடன் அத்வானி சந்திப்பு:
இந் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வந்த அத்வானி அங்கு ஆர்.ஆர்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பையாஜி ஜோஷியையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது, எதியூரப்பா விவகாரத்தில் மோடியின் முயற்சிகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கக் கூடாது என்று அத்வானி கோரியதாகத் தெரிகிறது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications