திவ்யாவை வரும் 8ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு

தர்மபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார் திவ்யாவின் கணவர் இளவரசன். இது தற்கொலை அல்ல கொலை என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுந்தரேசன் கொண்ட அமர்வு, திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது.
இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திவ்யாவை வரும் 8ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, ஆஜராகும் வரை திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அதன் பின்னர் நீதிபதிகள் சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர்... அவை
- திவ்யாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் திவ்யாவுக்கு கவுன்சிலிங் தேவையா என அவரது கருத்தை கேட்டு அரசுத் தரப்பு தெரிவிக்க வேண்டும். அதன்பிறகே அவருக்கு கவுன்சிலிங் அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
- தர்மபுரி மாவட்டத்தில் பொறுப்பு மிக்க அதிகாரிகள் கொண்ட குழு உடனடியாக திவ்யா மற்றும் அவரது தாயாரை சந்தித்து அவர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை எடுத்துக் கூறி, அவர்கள் சென்னைக்கு வர தயாராக இருக்கிறார்களா என்பது பற்றி முதலில் அறிய வேண்டும்.
- திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு வரும் திங்கட்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications