ஐ.ஏ.எஸ் போல நடித்து வங்கியில் பணமோசடி- நடிகை லீனா மரியாவின் காதலன் கைது
டெல்லி: ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து சென்னை வங்கி ஒன்றில் ரூ.19 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவான நடிகை லீனா மரியாபாலின் காதலனை கொல்கத்தாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் என்ற சேகர் ரெட்டி (22), ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்தும், முக்கிய அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர் போலவும் நடித்தும் மோசடி செய்தார். இதனையடுத்து சென்னை, பெங்களூரில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான ரெட்டி,சிறையில் இருந்து வெளியே வந்தவர்.
இவர் மலையாள நடிகையான லீனா மரியாபாலின் காதலர் ஆவார். லீனா பாலும், சேகர் ரெட்டியும் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் ரூ.19 கோடியே 22 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர்.

லீனா மரியாபால்
இந்த நிலையில், டெல்லியில் கடந்த மே 27ஆம் தேதி லீனா மரியாபாலை போலீசார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். ஆனால், சேகர் ரெட்டி காரில் தப்பி விட்டார். இதனையடுத்து ரெட்டி வைத்திருந்த 9 சொகுசு கார்கள் மற்றும் 4 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்கத்தாவில் கைது
இதனிடையே, சேகர் ரெட்டி, ஜெய்ப்பூர், மும்பை, கோவா, கொல்கத்தா, சிலிகுரி என பல இடங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக சுற்றித் திரிந்தார். டெல்லி போலீசாரும், சேகர் ரெட்டி மீது மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கடைசியாக, அவர் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் கங்கர்பிதா எல்லையில் பதுங்கி இருப்பதை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, டெல்லி போலீசார் விரைந்து சென்று கொல்கத்தாவில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து சேகர் ரெட்டியை வெள்ளிக்கிழமை மாலையில் கைது செய்தனர்.

சொகுசு வாழ்க்கை
டெல்லி போலீசார் சேகர் ரெட்டியை கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையின்போது, மோசடி பணத்தில் சேகர் ரெட்டி சொகுசு வாழ்க்கை நடத்தி இருப்பது தெரிய வந்தது. ரூ.19 கோடி மோசடி பணத்தில், ரூ.7 கோடிக்கு சொகுசு கார்களும், ரூ.1 கோடிக்கு நகைகளும் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

நகை, பணம் பறிமுதல்
அவரிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 2 வைர மோதிரங்கள், ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு வைர கம்மல், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பேக், 5 செல்போன்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் நேபாளம், பூடான் நாடுகளின் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிவாரண்ட்
இதற்கிடையே, சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட தகவலை சென்னை போலீசாருக்கு தெரிவித்து விட்டதாக டெல்லி போலீசார் கூறினர். அதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சேகர் ரெட்டிக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பெற்று டெல்லிக்கு செல்ல உள்ளனர். அங்கு சேகர் ரெட்டியை கைது செய்து சென்னைக்கு கொண்டு வர உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications