ஜெகன் மோகன் ரெட்டிக்காக 200 தேங்காய்கள் உடைத்து பிரார்த்தனை செய்த நடிகை ரோஜா!

ஒரு பக்கம் மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள ஆன்ட்டி நடிகை ரோஜா, அரசியலிலும் தீவிரமாக உள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில், வரும் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார் ரோஜா.
சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ‘‘மரோபிரஜா பிரஸ்தானம்'' என்ற பாதயாத்திரையை மேற்கொண்டார். நேற்று வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார். மொத்தம் 2664 கி.மீ. தூரம் நடந்து பொது மக்கள் குறைகளை கேட்டறிந்துள்ளார்.
ஷர்மிளா 200 நாள் பாதயாத்திரை சென்றதை தொடர்ந்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதியும் நடிகையுமான ரோஜா நகரியில் உள்ள தேசம்மா கோவில் எனப்படும் சிவசக்தி அம்மன் கோவிலில் 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார். கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தினார்.
நடிகை ரோஜா கூறுகையில், "ராஜசேகர ரெட்டி 1470 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். அவரது மகள் ஷர்மிளா தந்தையை மிஞ்சி 2664 கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்றுள்ளார்.
அடுத்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஷர்மிளா பாத யாத்திரையின் போது பொது மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டதால் ஜெகன் மோகன் ரெட்டியால் மக்களுக்கு நல்லாட்சியை தரமுடியும்," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications