ஹேப்பி பர்த்டே டோணி... 'கெட் வெல் சூன்'
டெல்லி: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டனான மகேந்திர சிங் டோணி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ராஞ்சியில் பிறந்த அவர் சச்சின் டெண்டுல்கரை தனது ரோல் மாடலாக நினைத்து வளர்ந்துள்ளார்.

டிக்கெட் பரிசோதகர்
டோணி வளர்ந்ததும் ரயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்தார்.

கிரிக்கெட்
பின்னர் டோணி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

நீளமான முடி
விளையாட வந்த புதிதில் டோணி நீளமான முடி வைத்திருப்பார். அது கூட ஒரு ஸ்டைலாக ஆனது.

ஹெலிகாப்டர் ஷாட்
டோணியின் ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஷாட் ஆகும். அவர் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது ரசிகர்களை கவர்ந்தது.

கூல் கேப்டன்
எந்த இக்கட்டான சூழலிலும் அமைதியாக இருப்பதால் டோணியை அனைவரும் கூல் கேப்டன் என்கின்றனர்.

டுவென்ட்டி 20 உலகக் கோப்பை
2007ம் ஆண்டில் கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி டுவென்ட்டி 20 உலகக் கோப்பையை வென்றது.

உலகக் கோப்பை
1983ம் ஆண்டு கபில் தேவின் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு 2011ம் ஆண்டில் டோணியின் தலைமையில் இந்தியாவுக்கு உலகக் கோப்பை கிடைத்தது.

மறக்க முடியாத ஜூலை
டோணிக்கு ஜூலை மாதம் மறக்க முடியாத மாதம் ஆகும்.

ஜூலை 3ல் நிச்சயம்
டோணிக்கும் அவரது பள்ளித்தோழியான சாக்ஷிக்கும் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி நிச்சயம் நடந்தது.

ஜூலை 4ல் திருமணம்
2010ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி டோணி, சாக்ஷியை மணந்தார்.

3வது திருமண நாள்
கடந்த 4ம் தேதி டோணி, சாக்ஷி தங்களது 3வது திருமண நாளை கொண்டாடினர்.

ஜூலை 7ல் டோணிக்கு பிறந்தாள்
டோணி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

கேப்டனாக சாதனை
இந்திய அணியின் கேப்டனாக ஆன பிறகு டோணியின் மிகப்பெரிய வெற்றி என்றால் அது இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றது தான்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி மோசமாக விளையாடி தோல்வி அடைந்தது. இதனால் டோணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

விளம்பர படங்கள்
டோணி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

பணக்கார விளையாட்டு வீரர்
கேப்டன் டோணி 31.5 மில்லியன் டாலர் வருவாயுடன் போர்ப்ஸ் பட்டியலில் 16வது இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் டோணி 31வது இடத்தில் இருந்தார். இந்தியாவின் பணக்கார விளையாட்டு வீரர் அவர் தான்.

சாம்பியன்ஸ் டிராபி
அண்மையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி டோணி தலைமையில் வென்றது.

காயம்
டோணிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இருந்து அவர் விலகினார்.

கேப்டன் கோஹ்லி
டோணி காயம் அடைந்ததால் இந்திய அணியின் கேப்டனாக விராத் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியிலும் டோணி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பைக்
டோணிக்கு அதிவேக பைக்குகள் என்றால் கொள்ளைப் பிரியம்.

மஹி
டோணியின் செல்லப் பெயர் மஹி ஆகும்.

ரேசிங் டீம்
டோணிக்கு சொந்தமாக மஹி ரேசிங் டீம் உள்ளது.

ரசிகர்களுக்கு பிடித்த டோணி
டோணி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்த விளையாட்டு வீரர் ஆவார்.

'தல' டோணி
சென்னை ரசிகர்கள் டோணியை செல்லமாக 'தல' என்று அழைக்கின்றனர்.

ஸ்கிப்பர்
விக்கெட் கீப்பிங்கில் டோணி கெட்டிக்காரர் என்று பெயர் எடுத்தவர்.

மௌனம் காத்த டோணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் சிக்கியபோது அது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்தார் டோணி.

பிரஸ் மீட்
செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் குருநாத் மெய்யப்பன் விவகாரம் பற்றி கேட்டதற்கு சாம்பியன்ஸ் டிராபி பற்றி கேள்வி கேட்கலாமே என்றார்.

சாக்ஷி
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர் வின்து தாரா சிங் டோணியின் மனைவி சாக்ஷி அருகே அமர்ந்து கிரிக்கெட் பார்த்த போட்டோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

வருத்தப்பட்ட வின்து
சாக்ஷியின் அருகில் அமர்ந்து கிரிக்கெட் பார்த்தது தன்னுடைய தவறு என்றும், அந்த புகைப்படங்களை மீடியாக்கள் ஒளிபரப்பியதால் தான் வருத்தப்படுவதாகவும் வின்து தெரிவித்தார்.

நீங்களும் வாழ்த்துங்கள்
கேப்டன் டோணிக்கு நீங்களும் வாழ்த்துச் சொல்லுங்கள். மேலும் அவர் விரைவில் குணமடையவும் வாழ்த்துங்களேன்.












Click it and Unblock the Notifications