அதிமுக கூட்டத்தில் அமைச்சர் தாமோதரன் முன்பு கட்சியினர் அடிதடி
கோவை: வால்பாறையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் தாமோதரன் முன்பு கட்சியினர் அடிதடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக செயற்குழு கூட்டம் துளசியம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. தொகுதி செயலாளர் அமீது, நகர செயலாளர் மயில்கணேஷ் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளரும், வேளாண்துறை அமைச்சருமான தாமோதரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது,
லோக்சபா தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நம் கட்சியைப் பொறுத்தவரை யார் என்ன தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்கவே மாட்டார். எனவே கட்சியின் கட்டுப்பாட்டை உணர்ந்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
வேற்றுமைகளை மறந்து செயல்பட்டால் பொறுப்புகள் தானாக தேடி வரும். எனவே, கட்சி நிர்வாகிகள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செய்லபட வேண்டும் என்றார்.
அப்போது கருமலை கிளை செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் திடீர் என்று தாமோதரனை முற்றுகையிட்டனர். வால்பாறை நிர்வாகிகள் சிலர் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து வருவதாக அவர்கள் கூச்சலிட்டனர். மேலும் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்பபோது கருமலையைச் சேர்ந்த தொண்டர் மூக்கன் என்பவருக்கு அடி, உதை விழுந்தது. இதை பார்த்த தாமோதரன் கட்சியினரை சமாதானம் செய்துவிட்டு காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications