சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திமுக நாளை ஆர்பாட்டம்
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை திமுக சார்பில் தமிழகம் முழுதுவம் ஆர்ப்பாட்டம் நடபெற உள்ளது.
இது குறித்து தென் சென்னை மாவட்டக் திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அதிமுக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தினை திரும்பப் பெறக் கோரியும், சேது சமுத்திரத் திட்டத்தை மேலும் தாமதம் செய்யாமல் உடனே மத்திய அரசு நிறைவேற்றக் கோரி வலியுறுத்தியும் ஜூலை 8 ம் தேதி (திங்கள்கிழமை) அன்று அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் நாளை அன்று காலை 9.00 மணியளவில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதே போல, வடசென்னை மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் தலைமையில்- தணிக்கைக்குழு உறுப்பினர் எல்.பலராமன், சட்டத்துறை இணைச் செயலாளர் இரா.கிரி ராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications