நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தால் மின் உற்பத்தி குறைந்து வரும் அபாயம்
நெய்வேலி: தொடரும் என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தால், மின் உற்பத்தி குறைந்துள்ளது. மழையின் காரணமாக குகைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், இன்னும் பணிமுடக்கம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
கடந்த 3ம் தேதி மத்திய அரசின் 5 சதவீத பங்கு விறபனையை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட் அதடையை மீறி போராட்டத்தில் குதித்தனர் என்.எல்.சி தொழிலாளர்கள். வேலை நிறுத்தப் போராட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் 15 தொழிற்சங்கங்களை சேர்ந்த 27 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் மட்டும் பாதுகாப்புடன் பணிக்கு சென்று வருகிறார்கள்.
ஏற்கனவே, பெய்த மழையின் காரணமாக, சுரங்கங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே மழை பெய்ய தொடங்கினால், சுரங்கப்பணிகள் முற்றிலும் முடங்க கூடிய அபாய நிலையில் உள்ளது.
தற்போது, வெறும் 4 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதால், மின் உற்பத்தி அளவானது 3 அனல் மின்நிலையங்களையும் சேர்த்து முழு அளவான 2490 மெகாவாட் என்கிற நிலையில் இருந்து படிப்படியாக குறைய தொடங்கிவிட்டது. இது கடந்த 5-ந்தேதி மாலை நிலவரப்படி 2 ஆயிரத்து 153 மெகாவாட் என்கிற நிலையில் மின் உற்பத்தி இருந்தது.நேற்றைய காலை 6 மணி நிலவரப்படி அனல் மின்நிலையம் 1-ல் அதன் உற்பத்தி அளவான 600 மெகாவாட் என்பது மிகவும் குறைந்து 360 மெகாவாட் என்கிற நிலைக்கு வந்து விட்டதாக கூறப்பட்டது.
நேற்று மின் உற்பத்தி 2 ஆயிரத்து 73 என்கிற நிலையில் இருந்தது. இது வழக்கமான அளவை காட்டிலும் 417 மெகாவாட் மின் உற்பத்தி குறைவு ஆகும். அனல்மின் நிலையம் 1-ல் முழுஅளவான 600 மெகாவாட்டிற்கு பதிலாக 344 மெகாவாட் அளவும், அனல்மின் நிலையம் -2ல் மொத்த அளவான 1470 மெகாவாட் அளவில் இருந்து 1309 மெகாவாட் உற்பத்தியும், அனல்மின் நிலையம்-1 விரிவாக்க பகுதியில் முழு அளவான 420 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியும் உள்ளது.
இந்நிலையில் போராட்டம் நீடித்தால், மின் உற்பத்தி நிச்சயம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications