‘தொப்பை’யைக் குறைக்க போலீசாருக்கு ரூ 9 ஆயிரம் போனஸோடு 12 நாள் சிறப்பு முகாம்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: போலீசாரின் தொப்பையைக் குறைத்து அவர்கள் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 12 நாள் சிறப்பு முகாமும், ரூ 9 ஆயிரம் போனஸையும் அறிவித்துள்ளது தாய்லாந்து அரசு.

குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், சாலை விதிகளை ஒழுங்கு படுத்திவதற்கும் தொப்பையும், உடல் பருமனும் பெரும் சவாலாக இருக்கிறதாம் தாய்லாந்து போலீசாருக்கு. இதற்கு முடிவு கட்டும் விதமாக தொப்பையோடு அல்லாடும் 60 போலீசாரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 12 நாள் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது தாய்லாந்து அரசு.

இந்த முகாமில் சிறப்பாக செயல் பட்டு தங்களது உடல் எடையைக் குறைத்து ஒல்லியாகும் வீரர்களுக்கு ரூ 9000 போனஸையும் அறிவித்துள்ளது அரசு.

போலீஸ் என்றாலே கட்டுடல், மிடுக்கு என்ற நிலை மாறி, இன்று நிறைய போலீஸார் தொப்பையுடன் காணப்படுகிறார்கள். திரைப்படங்கள் பலவற்றில் இத்தகைய போலீசாரைக் கிண்டல் செய்யும் விதமாக காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தும் அவர்கள் திருந்தும் வழியைக் காணவில்லை. விரைவில், இதுபோன்ற முகாம் மற்றும் போனஸ் போன்றவற்றை நம்மூர் போலீசுக்கும் அறிவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+