சான் பிரான்சிஸ்கோவில் விமானம் விழுந்து விபத்து- 2 பேர் பலி, 180 பேர் காயம்
சான் பிரான்சிஸ்கோ: ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது நொறுங்கியது. இதில் 2 பேர் பலியானார்கள். 180 பேர் காயமடைந்தனர்.
தரையிறங்கிய வேகத்தில் விமானம் நொறுங்கி துண்டானது. உடனடியாக தீயும் பிடித்துக் கொண்டது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விமானம் சியோலிலிருந்து வந்ததாகும். சனிக்கிழமையன்று சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகி விட்டது. விழுந்து உடைந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்து ஏற்பட்டதும் விமானத்தின் வால் பகுதி தனியாக பிய்த்துக் கொண்டு போய் விட்டது.
விபத்தில் 2 பேர் பலியானார்கள். 180 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications