நிலக்கரி சுரங்க வழக்கு: அரசிடம் விசாரணையை பகிர்ந்து கொள்ள அனுமதி கோரும் சிபிஐ!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கடந்த 5-ந் தேதி வரையிலான விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் வைத்து சிபிஐ இன்று தாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கின் விசாரணை விவரங்கள் அரசிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று அந்த அறிக்கையில் சிபிஐ உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் விசாரணைக்கான சில அனுமதிகளைப் பெற வேண்டிய நிலையில் மத்திய அரசிடம் தகவல் பரிமாற வேண்டியிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னாள் நிலக்கரி துறை செயலர் குப்தாவிடம் அண்மையில் விசாரணை நடத்த கம்பெனிகள் விவகார அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அனுமதி கிடைக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் திருத்தினார் என்பதால்தான் கெடுபிடிகளைக் காட்டி சிபிஐக்கு கடிவாளம் போட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ இன்று தாக்கல் செய்திருக்கும் அறிக்கை மீது புதன்கிழமை விசாரணை நடைபெற இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications