ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆஜராக விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் தயாளு அம்மாள் மனு!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கலைஞர் டிவியும் ஆதாயம் அடைந்தது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முக்கிய அரசு சாட்சியாக கலைஞர் டிவியின் பங்குதாரரான தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
ஆனால் தமக்கு மறதி நோய் உள்ளிட்டவை இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு ஒன்றை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை முதலில் விசாரித்த நீதிபதி வீணா பீர்பால், விசாரணையை முடக்கும் நோக்கத்துடன் தயாளு அம்மாள் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் என்று கூறியதுடன் மனுவை தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரிக்க முடியாது என்று கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி கவுர் மனுவை விசாரித்து, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று தயாளு அம்மாள் சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications