பரிதிக்கு எதிராக மகனை களம் இறக்கி செக் வைத்த திமுக- தூண்டியது யார் ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி அதிமுகவில் இணைந்துள்ள இந்த நேரத்தில், அதுவும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் அவர் முழங்கவுள்ள நிலையில், அவரது மகனை தூண்டி விட்டு திமுக மேடையில் பேச வைத்துள்ளனர் சில திமுக உயர்மட்ட நிர்வாகிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பரிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும், அதற்கு பரிதி குடும்பத்தையே பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பரிதியின் மகன் பரிதி இளம்சுருதியை களம் இறக்கி விட்டுள்ளது திமுக என்று கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் பரிதி இளம் வழுதி. ஆனால், அவரது மகன் பரிதி இளம்சுருதி, தனது தந்தை வழியில் அதிமுகவுக்குச் செல்லாமல் திமுகவிலே இருந்து வருகின்றார். மேலும், பரிதி இளம்சுருதி, வட சென்னை திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக தற்போது பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை முதல் தேதி அன்று சென்னை அயனாவரத்தில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி-யை பரபரப்பாக பேச வைத்துள்ளனர்.

வாய்ப்பை பயன்டுத்திக் கொண்ட பரிசு இளம் சுருதி இளம் வயதுக்கு ஏற்ப, தனது வேகத்தை பேச்சிலும் காட்டியுள்ளார். இதை தான் சில திமுக நிர்வாகிகள் எதிர்பார்தார்களாம். அவர்கள் எதிர்பார்த்தற்கு மேலே சுருதி, சுருதி பிசகாமல் அதிமுகவையும், முதல்வரையும் பற்றி வார்த்தைகளால் வெளுத்துவிட்டாராம்.

இதனையடுத்து, பரிதி இளம்சுருதி மீது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தகவல் வெளியான போது, பரிதி இளம் வழுதி, தன்னை திமுக உடனே பலி வாங்கிவிட்டாதக தனது தக நண்பர்களிடம் கூறியதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+