சென்னையில் ராத்திரியானால் நல்ல மழை... மேலும் தொடருமாம்
சென்னை: செனனை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் குஷியடைந்துள்ளனர். இந்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தற்போது கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் வட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு அல்லது அதிகாலை நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நல்ல மழை கொட்டியது. இன்றும் அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியது. பலருக்கு மழை பெய்ததே தெரியவில்லை.
எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதேபோல விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழை பெய்துள்ளது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னையின் சில இடங்கள் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications