''வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்'': தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40 வயது மீனவர் இன்னாசி, மார்க்கெட் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். பின்னர் பாருக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பிராந்தியை குடிக்க உட்கார்ந்தார். பாட்டிலைத் திறக்க முயன்றபோது அதற்குள் சின்னதாக ஏதோ இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர்கள் நன்கு உற்றுப் பார்த்தபோது பாட்டிலுக்குள் கிடந்தது குட்டிப் பாம்பு என்று தெரிய வந்து அதிர்ந்தனர்.
அரை அடி நீளத்தில் அந்த பாம்பு செத்துப் போய்க் கிடந்தது. இதையடுத்து பாரில் இருந்த அத்தனை குடிகாரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் மது குடிப்பதை நிறுத்தினர். சிலரோ, பாம்புதானே தூக்கிப் போட்டுட்டு குடிப்பா என்பது போல தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர்.
மது பாட்டிலுக்குள் பாம்பு கிடந்தது குறித்து போலீஸில் புகார் தரப் போவதாக மீனவர் இன்னாசி தெரிவித்தார்.
மதுவை நிரப்பும்போது இந்த பாம்பையும் சேர்த்து மதுபான ஊழியர்கள் நிரப்பி விட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே மக்கள் குடித்துச் சாகிறார்கள். இந்த நிலையில் செத்துப் போன பாம்பையும் சாப்பிட்டு சாக வேண்டும் போல...
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications