முகாமில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற 17 இலங்கை தமிழர்கள் கைது
காஞ்சிபுரம்: தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் போலீசில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தனர். அவர்களில் வழக்குகளில் தொடர்புடையவர்களை சிறப்பு முகாமிலும் மற்றவர்களை திறந்தவெளி முகாம்களிலும் அரசு தங்கவைத்துள்ளது.
இவர்களில் பலர் தங்கள் சொந்த நாடான இலங்கைக்கோ, உறவினர்கள் உள்ள ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கோ அடிக்கடி தப்பிச் செல்வதும் காவல்துறை அவர்களை பிடிப்பதும் தொடர்கதையாகிவருகிறது.
இதேபோல் காஞ்சபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியிலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேரை காவல்துறை பிடித்துள்ளது. பிடிபட்டவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் மதுரை மாவட்டம் ஆணையூர் திறந்தவெளி முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும், வாலாஜாபாத்தை சேர்ந்த ஜோதிராஜா என்ற ஏஜெண்ட் மூலம் இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட இலங்கை தமிழர்களை அந்தந்த முகாம்களில் திரும்ப கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் தந்த தகவலையடுத்து போலீசார் ஜோதிராஜாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட எஸ்.பி. விஜயகுமார், ‘‘முகாம்களில் தங்கியிருப்பவர்களிடம் உறவினர்களிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி மர்ம நபர்கள் தொடர்ந்து மோசடி செய்து வருகிறார்கள். இப்படி தப்பிச் செல்வது சட்ட விரோதம் என்பதோடு தங்களுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications