ஈழ மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவிய நடிகர் சூர்யா

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர்.
ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்க்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர்.
அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம்கூறினார்.
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது. அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.
தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications