நம்மூரு ‘பாலா’ படம் மாதிரி 28 ஹேர்கட்டிங்ஸ்... வடகொரியா அரசு விதித்த ‘வினோத முடி கட்டளை’
பியொங்யாங்: பொதுவாக மாதம் மும்மாரி மழை பொழிகிறதா, மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா என்பதைத் தான் அரசாங்கம் யோசிக்கும். மக்களின் நலனுக்காக சில கட்டுப்பாடுகளை விதிக்கும். பெரும்பாலும், அதுவும் உடை கட்டுப்பாடாகவோ அல்லது உணவு கட்டுப்பாடாகவோ தான் இருக்கும்.
ஆனால், சமீபத்தில் வட கொரிய அரசு வித்தியாசமான ‘முடி' கட்டுப்பாடு உத்தரவை போட்டு எல்லாரையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் தள்ளி உள்ளது.
இவ்வளவுக்கும், இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்தது வயதான தாத்தா இல்லை, இளவயது அதிபர் தான் என்பது ஆச்சர்யம். நமது தமிழ் படங்களில் பாலா, ஹீரோக்களுக்கு வித்தியாசமாக முடி வெட்டி விட்டு ரசிப்பாரே அது போல இருக்கிறது இந்த ‘முடிக் கட்டுப்பாடும்'...

நாங்க ‘ஹேர்’ உள்ளவங்க...
சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜோங்உன் என்ற இளம் அதிபர், ‘ நம் நாட்டு மக்கள் இப்படித் தான் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்' என்று 28 விதமான ஹேர் ஸ்டைல்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

வாங்க கம்பி எண்ணலாம்...
இந்த 28 ஹேர் ஸ்டைல் மாடல்களைத் தாண்டி யாராவது புதுமையாக ட்ரை பண்ணினால், அவர்களை வரவேற்க கம்பி போட்ட கதவுகள் காத்திருக்கிறதாக மிரட்டியிருக்கிறார் கிம்.

எனக்கு 18, உனக்கு 10....
18 ஹேர் ஸ்டைல்ஸ் பெண்களுக்கு, 10 ஆண்களுக்கு என இதில் பாகப் பிரிவினை வேறு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சலூன்காரர்கள் பிழைத்துக் கொள்வார்கள்...
ஆண்கள் கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்டியே ஆக வேண்டும். சாதாரண ஆண்களுக்கு அதிக பட்ச முடி நீளம் 5 செ.மீ எனவும், ராணுவ வீரர்களுக்கு 7 செமீ எனவும் வரையறை உண்டு.

பரபரப்பா எதையாவது செய்யணுமா குமாரு...
சமீபத்தில் அணு ஆயுத சோதனைகள் மூலம் அமெரிக்கா மாதிரியான நாடுகளை டீலில் விட்டவர் தான் இந்த கிம் என்பது நினைவூட்டப் பட வேண்டிய ஒன்ரு.

சார், நீங்க ‘பரதேசி’ பாத்துட்டீகளா..?
எப்பவுமே சட்டி கவுத்த தலை மாஹ்டிரியே, தன் நாட்டு ஆண்களோட தலை இருக்கணும்னு ஆசைப்படும் அதிபர் கிம், நம்மூரு பாலா ரசிகரா இருப்பாரோ...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications