பெண்டாஸ்டிக், நா நல்லா இருக்கேன்... ட்வீட்டர், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட ஹிருத்திக்
மும்பை: சமீபத்தில் மூளையில் ஆபரேஷன் செய்யப் பட்டு தற்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான் நலமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று செய்தி அனுப்பியுள்ளார்.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னதாக ஹிந்தி நடிகர் ஹிருத்திக்கிர்கு மூளையில் செய்யப் பட்ட ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
நட்சத்திரப் பட்டாளங்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்த வண்ணம் உள்ளன.

ஆபரேஷன் சக்சஸ்...
ஹிருத்திக்கின் அப்பாவான நடிகர் ராகேஷ் ரோசன் ‘ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது என மீடியாக்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

நலம் விசாரிப்புகள்...
அதனைத் தொடர்ந்து ஹிருத்திக்கின் திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் அவரை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்த வண்ணம் உள்ளனர்.

ரசிகர்கள் ஏக்கம்...
ஆனால், சாதாரண எளிய ரசிகர்களுக்கு ஹிருத்திக்கின் தற்போதைய நிலைமையைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் நிலவியது. இதனை புரிந்து கொண்ட ஹிருத்திக் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்துள்ளார்.

சூப்பர்...
சலைன் ஏற்றப்பட்ட கைகளோடு, ‘சூப்பர்' என்று விரல்களைக் காட்டிய தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஹிருத்திக்.

நல்லுள்ளங்களுக்கு நன்றி...
கூடவே, ‘தான் நலமாக இருப்பதாகவும், தன் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் நன்றி' எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்...
கூடவே வெள்ளிக்கிழமை ரிலீசாகவுள்ள தனது நண்பரின் படத்திற்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் ஹிருத்திக்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications