ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய ஆளுநர் பரிந்துரை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 6 மாத காலமாக இருந்து வரும் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய ஆளுநர் சையது அகமது பரிந்துரைத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. பின்னர் பாஜகவுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா விலக்கிக் கொண்டது. பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உடனே ஆட்சி அமைக்க இயலாத நிலையில் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த 6 மாத கால ஜனாதிபதி ஆட்சி தற்போது முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ஆட்சி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்தது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் சையது அகமதுவை நேரில் சந்தித்த ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க தமக்கு ஆதரவு இருப்பதாக உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்டு இன்று அம்மாநிலத்தில் நீடித்து வரும் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யலாம் என்று பரிந்துரைத்து கடிதம் அனுப்பி உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications