டெல்லி மெட்ரோ ரயில்களில் ஆண்-பெண் ஆபாசம்: வக்கிர இணையத்தளங்களுக்கு போன ரகசிய வீடியோக்கள்!
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில்களில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் ஆண்-பெண்களின் பொது இட அசிங்கங்களை அப்படியே பல்வேறு ஆபாச இணையத்தளங்களில் வீடியோவாக போட்டுள்ளது ஒரு கும்பல்.
இந்தக் கும்பலுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள சிசிடிவி வீடியோக்கள் எப்படி கிடைத்தன என்பது தெரியவில்லை. மெட்ரோ ரயில் அலுவலகத்தில் அல்லது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணியாற்றும் யாரோ தான் இந்த வீடியோக்களை இவர்களுக்குத் தந்திருக்க வேண்டும் அல்லது அந்த நபரே தான் ஆபாச இணையத்தளங்களில் இந்த வீடியோவை அப்லோட் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

மேலும் இந்த வீடியோக்கள் எம்எம்எஸ்-களாக செல்போன்களிலும் பரவி வருகின்றன.
மொத்தம் 13 மெட்ரோ ரயில் ஆபாச வீடியோக்கள் இதுவரை இணையத்தளங்களில் அப்லோட் ஆகியுள்ளன. இதை இதுவரை 1.5 லட்சம் பேர் பார்த்து 'ரசித்துள்ளனர்'.
குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்கள் அதிகமில்லாத பெட்டிகளில் ஏறும் ஆண்-பெண்கள் சிலர் ரயிலில் வைத்தே அறுவறுப்பான வேலைகளில் இறங்குகின்றனர். இதை அதில் உள்ள வீடியோ கேமராக்கள் படம் பிடிக்கின்றன என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட செயல்களைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தக் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் இந்த ஆபாசங்களும் ஏராளமாக பதிவாகின்றன.
இந்த வீடியோக்கள் தான் ஆபாச இணையத்தளங்களுக்கும் எம்எம்எஸ்களாக செல்போன்களுக்கும் போய்ச் சேர்ந்துள்ளன.
இதில் முக்கியமான கேள்வி, இந்த வீடியோக்கள் எப்படி வெளியே போயின என்பது தான்.
இந்த வீடியோ கேமராக்கள் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இப்போது வீடியோவை லீக் செய்தது யார் என்பது தொடர்பாக இந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதை நாங்கள் செய்யவில்லை, அவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications