32,000 பட்டதாரிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டாம்: ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: கடந்த 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேர் தகுதித் தேர்வு எழுதத்தேவையில்லை. அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010ம் ஆண்டு இறுதி வரை பதவி மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதனடிப்படையில் , 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. தேர்தல் நேரம் நெருங்கியதால் பணி நியமனம் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படவே ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு முறையை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு கொண்டுவந்தது. இதனையடுத்து தகுதித் தேர்வில் தேர்வானவர்கள் பைசா செலவில்லாமல் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர்
அதேசமயம் 2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் சார்பில் 92 பேர், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க உத்தரவிட்டது.
அத்துடன் வழக்கு தொடர்ந்த 92 பேருக்கும் பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications