கருணாநிதி மருமகன் செல்வத்துக்கு இதய அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மருமகன் செல்வத்துக்கு சென்னை தனியார் மருத்துமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை கருணாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான செல்வத்துக்கு வயது 73. அவருக்கு கடந்த 2-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதய ரத்த குழாயில் இருந்த அடைப்பை அகற்ற கடந்த 7-ந் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செல்வத்தை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மு.க. ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications