இப்படியெல்லாமா ஒரு எதிர்க்கட்சித் தலைவர் முக்கியப் பிரச்சினை குறித்து பேசாமல் நழுவுவார்??
ரிஷிவந்தியம்: தனது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம், தர்மபுரி, மரக்காணம் விவகாரம் குறித்து எதுவுமே கேட்கக் கூடாது என்று செய்தியாளர்களுக்கு அவரது கட்சியினர் தடை போட்டு விட்டனர்.

மேலும், தனது தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து 8 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 50 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ் அடுப்பு, குக்கர் உள்ளிட்டவற்றையும் அவர் அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் சந்திப்பதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவரது கட்சிப் பிரமுகர்கள், தலைவரிடம், தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் குறித்து எதுவும் கேட்க வேண்டாம் என்று ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்து விட்டு செய்தியாளர்களை விஜயகாந்த்தைச் சந்திக்க அனுமதித்தனர்.
இப்படியெல்லாமா ஒரு தலைவர், அதுவும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச நழுவுவார் என்று செய்தியாளர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.
4 மாதத்திற்குப் பிறகு
அடிக்கடி தொகுதிக்குப் பக்கம் வராத எம்.எல்.ஏக்கள் வரிசையில் விஜயகாந்த்தை சேர்க்க முடியாதுதான். இருப்பினும் அடிக்கடி வருபவரும் இல்லை.
4 மாதங்களுக்கு முன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தந்தார் விஜயகாந்த். அதன் பிறகு இன்றுதான் அவர் ரிஷிவந்தியம் வந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications