தூத்துக்குடி கடலில் 3 மதுரை மாணவர்கள் மூழ்கி பலி- ஒருவரைக் காணவில்லை
தூத்துக்குடி: மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு இன்பச் சுற்றுலா வந்த மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை.
மதுரை திருநகரை சேர்ந்த சி.எஸ்.ராமாச்சாரி தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ படித்து வரும் 120 மாணவ, மாணவியர்கள் இன்று இன்பச் சுற்றுலாவாக தூத்துக்குடி புறப்பட்டு வந்தனர். பள்ளி ஆசிரியர்கள் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவியர்களை அழைத்து வந்தனர்.
இன்று காலை தூத்துக்குடி வந்த மாணவ, மாணவியர்கள் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தை பார்வையிட்டனர். அதன்பின்னர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பகுதிகளை பார்வையிட்ட மாணவ, மாணவியர்கள் துறைமுகத்தை அடுத்துள்ள பீச்சிற்கு சென்றனர்.

கடற்கரையில் இறங்கிய மாணவர்களில் பலர் கடலில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினர். மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்தி கரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்தநேரத்தில் கடலில் குளித்த மாணவர்கள் கடல் அலையில் சிக்கிக் கொண்டனர். காற்று அதிவேகமாக வீசியதால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதனால் ராட்சத அலைக்குள் சிக்கிய சில மாணவர்கள் மாயமாகினர். கடலில் மாணவர்கள் மாயமானது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புப் படை வீரர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் கடலில் மூழ்கி பலியான மாணவர்கள் சதீஷ்குமார், தேவானந்த், விஷ்ணு ஆகியோர் உடல்கள் மீட்க்கப்பட்டது.

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய மாணவர்கள் பாலமுருகன், பாலாஜி ஆகியோர் மீட்க்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலில் மூழ்கி மாயமான மாணவன் பரமேஸ்வரனை தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்ப சுற்றுலாவிற்காக வந்த மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது கண்முன்பாக கடல் அலையில் சிக்கி மாணவர்கள் பலியான சம்பவம் மற்ற மாணவ, மாணவியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காலையில் படுஉற்சாகமாக புறப்பட்டு வந்த மாணவ, மாணவியர்கள் சக மாணவர்கள் பலியானது கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இக்காட்சி அங்கு திரண்டு நின்ற பொதுமக்களின் கண்களில் இருந்தும் கண்ணீரை கசிய வைத்தது.
கடலில் பள்ளி மாணவர்கள் மூழ்கி பலியானது குறித்து தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications