கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இளவரசனின் பெற்றோர் காலவரையற்ற உண்ணாவிரதம்
தர்மபுரி: தர்மபுரி மருத்துவமனையில் கைது செய்யப்பட்ட 15 பேரையும் விடுவிக்கக் கோரி இளவரசனின் பெற்றோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இளவரசனின் உடலை தடயவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வழக்கறிஞர்களையும், பெற்றோர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இளவரசனின் பெற்றோர், உறவினர்களை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தனர்.
அதேசமயம் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைக் கண்டித்து, இளவரசனின் பெற்றோர் தங்களது சொந்த ஊரான நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியில் 150க்கும் மேற்பட்டோருடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 15 பேரையும் விடுவித்தால் மட்டுமே இளவரசனின் உடலை பெற்றுக் கொள்வோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நத்தம் காலனி பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications