உணவு பாதுகாப்பு சட்டத்தை ஓட்டாக மாற்றுவது எப்படி?: சோனியா தீவிர ஆலோசனை!

உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை லோக்சபா தேர்தலுக்குள் நிறைவேற்றி வாக்குகளாக மாற்றுவது என்பது காங்கிரஸின் திட்டம். இதை முழுமையாக செயல்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இதனால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் பொதுச்செயலர்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த சோனியா அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் 14 காங்கிரஸ் முதல்வர்கள் உட்பட 34 காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ந் தேதிடெல்லியில் உணவுப் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications