மத்திய பிரதேச அரசின் ‘சீதை’ கோயிலுக்கு இலங்கை அரசு அனுமதி!
Subscribe to Oneindia Tamil

சீதையின் கற்பு மீது ராமன் சந்தேகப்பட அதைப் போக்க ‘அக்னி பிரவேசம்' செய்த இடம் என்று கருதப்படுகிறது இலங்கையில் உள்ள நுவரெலியா அருகே இருக்கும் சீதா எலிய. இதனால் அங்கு சீதைக்கு கோயில் கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய பிரதேச பாஜக அரசு தெரிவித்திருந்தது.
இக் கோயில் அமைப்பது தொடர்பாக கட்ட கடந்த ஆண்டு முதலே முயற்சிகளை மத்திய பிரதேச அரசும் மத்திய அரசும் இணைந்து மேற்கொண்டது. இலங்கையும் கோயில் மாதிரி வடிவத்தை கோரியிருந்தது. பெங்களூரைச் சேர்ந்த கட்டிட கலை வல்லுநர் ஒருவரிடம் இம்மாதிரி உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. தற்போது அனைத்தும் முடிவடைந்து இலங்கை அரசு நுவரெலியா பகுதியில் கோயிலை கட்ட அனுமதி கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications