ஆஸி. சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது- ஒரு குழந்தை பலி-8 பேர் மாயம்- 88 பேர் மீட்பு!
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை பலியாகி உள்ளது. 8பேர் கதி என்னவென்று தெரியவில்லை. 88 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு மற்றும் இந்தோனேசியா இடையே 97 அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு நேற்று கவிழ்ந்தது. படகில் இருந்தோர் உதவிக்கு ஆஸ்திரேலிய கடற்படையினரை அழைத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஆஸ்திரேலிய கடற்படையினர் கடலில் தத்தளித்தோரை மீட்டனர்.
மொத்தம் 88 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு ஆண் குழந்தை பலியாகி உள்ளது. 8 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர் கிளாயர் தெரிவித்துள்ளார்.
அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் இலங்கை, ஆப்கான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.காணாமல் போனோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications