கூடங்குளம் அணுமின் நிலையம் நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியது

இதை இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஆர். சின்ஹா அறிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் அணு உலையை செயல்படுத்துவதற்கான பணிகள் மும்முரமக நடைபெற்று வந்த்ன. இதை மும்பையில் இருந்து வந்த அணுசக்தி ஆணையத்தின் மூன்று நபர் குழு நேற்று ஆய்வு செய்தது.
இதையடுத்து அணு மின் நிலையம் செயல்பாட்டை நேற்று நள்ளிரவுவாக்கில் தொடங்கியது. அணு உலையில் முதலில் உஷ்ண வெளிப்பாடு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணுசக்தி ஆணையத் தலைவர் சின்ஹா, கூடங்குளம் அணு உலை இனி முழுமையாக இயங்கும் என்று தெரிவித்தார்.
கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இங்கு ஒரு மாதத்தில் 400 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்டும் என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் புரோகித் தெரிவித்தார்.
இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அணு உலையில் அணு பிளவுக்கும், மின்சார உற்பத்தியை தொடங்கவும், கடந்த 11ஆம் தேதி அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே. சின்ஹா, இந்திய அணுசக்தி கழக தலைவர் கே.சி. புரோகித் ஆகியோர் நேற்று கூடங்குளம் வந்து, அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர்.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்படும். பின்னர் அதிலிருந்து மின்சாரம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். தற்போது முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கூடங்குளம் 2வது அணு உலையை பொறுத்தவரை, மாதிரி எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 8 மாதங்களில், இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications