மதச்சார்பின்மை என்றால் என்ன மிஸ்டர் மோடி? திக்விஜய்சிங் கேள்வி
டெல்லி: மதச்சார்பின்மை குறித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் விளக்கத்தை எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
புனேயில் நேற்று நடைபெற்ற பாஜக பேரணியின் போது பேசிய மோடி, மதச்சார்பின்மை எனும் முகமூடியை காங்கிரஸ் அணிந்து கொண்டிருக்க்கிறது என்று சாடினார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் இதுபற்றி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அத்வானி ஆகியோர் மதசார்பின்மைக்கு ஒரு மதம், ஒரு கலாச்சாரம், ஒரு நாடு என்று விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் மோடி, மதசார்பின்மைக்கு என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்று தெளிவு படுத்தவேண்டும். அவருடைய விளக்கத்தை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஏழை மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு உணவு அளிப்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். மோடி இதை அரசியலாக்கக்கூடாது என்றார்.


Click it and Unblock the Notifications
