சாராயம் வாங்க மனைவியை நண்பருக்கு ரூ.25,000க்கு விற்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை அருகே மது வாங்க தனது மனைவியை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் இருந்து 625 கிமீ தொலைவில் உள்ள அகோலாவைச் சேர்ந்தவர் பன்ட்லிக் சவான். அவரது மனைவி சங்கீதா. குடிப்பழக்கம் உள்ள சவான் கடந்த மாதம் தனது மனைவியை மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனது நண்பர் கணேஷ் வாலோடேவுக்கு ரூ.25,000க்கு விற்றுவிட்டார். இது குறித்து அறிய வந்த சங்கீதாவின் சகோதரி இந்த சம்பவம் பற்றி கடந்த 12ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சவானை கைது செய்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் தனக்கும் வாலோடவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், தன் கணவர் தன்னை அவருக்கு விற்ற பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சவான் மற்றும் வாலாடோ ஆகியோர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications