மூளைச்சாவு- பீடித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
நெல்லை: நெல்லை அருகே விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த பெண்ணில் உடல் உறுப்புகள் 5 நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
பணகுடி தர்மலிங்கபுரம் வடக்கு தெருவே சேர்ந்தவர் பன்னீர்செல்வன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மின் விபத்தில் பலியானார். இவரது மனைவி சாந்தி, பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு சுபாஷினி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். சுபாஷினி பிளஸ்2-வும், மணிகண்டன் பிளஸ்1ம் படித்து வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி சாந்தி தன்னுடன் வேலை பார்க்கும் 2 பெண்களுடன் பணகுடி நான்கு வழி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாந்திக்கு உடல், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் மூளைச்சாவு அடைந்து உடல் நலம் தேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சாந்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன் வந்தனர். நெல்லை கிட்னி கேர் தலைமை மருத்துவர் டாக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சாந்தியின் உடலில் செயல்படும் நிலையில் இருந்த 2 கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அகற்றி 5 பேருக்கு பொருத்தப்பட்டது. இதன் காரணமாக 5 பேர் புது வாழ்வ பெற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications