புதுச்சேரி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் ரங்கசாமி.. அதிமுக, காங். வாக் அவுட்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ஆனால் அவரது பட்ஜெட் உரையைப் புறக்கணித்து காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷமிட்டபடி வெளிநடப்புச் செய்தனர்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கி 4 நாட்கள் நடந்தது. இதையடுத்து இன்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். ஆனால் ரங்கசாமி அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து பட்ஜெட்டைப் படித்தார். இதையடுத்து காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.












Click it and Unblock the Notifications