பார்லி. மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

Monsoon Session of Parliament to begin on August 5
டெல்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தலைமையிலான பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பார்லிமென்ட் கூட்டத் தொடர் பற்றி விவாதிக்க தேதி முடிவு செய்யப்பட்டது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கி மொத்தம் 26 நாட்கள் நடத்தப்படுகிறது.

மழைக்கால கூட்டத் தொடரில் உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. இதேபோல் நிலம் கையகப்படுத்துதல் மசோதா, காப்பீடு மசோதா ஆகியவை மீதும் விவாதம் நடைபெறலாம்.

ஜூலை மாதம்தான் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும். ஆனால் நிறைவேற்றப்பட வேண்டிய உணவு பாதுகாப்பு மசோதா, அவசர சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் மெதுவாகவே ஆகஸ்ட் மாதத்தில் பார்லிமென்ட் கூட்டப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+