இங்கிலாந்தின் புத்திசாலி குழந்தை போட்டி: தமிழ் சிறுமி முதலிடம்
பிரிட்டனில் நடைபெற்ற குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஸ்ரீநிதி முதலிடம் பெற்றுள்ளார்.
பிரிட்டனின் சேனல் -4 மற்றும் மென்சா அமைப்பு இணைந்து புத்திசாலிக் குழந்தையை தேர்வு செய்யும் போட்டியை நடத்தியது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்த ஆண்டு 2000 பேர் கலந்து கொண்டனர். நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்ட இதன் இறுதிப் போட்டிக்கு 21பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீநிதி முதலாவதாக வந்து வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீநிதியின் தந்தை பிரகாஷ் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இந்திய வம்சாவளிக்குழந்தை ஒன்று இப்போட்டியில் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இயற்கையிலேயே புத்திசாலி
ஸ்ரீநிதி இயற்கையிலேயே புத்திசாலி குழந்தைதான். இந்த போட்டியில் வெல்வதற்காக கடுமையான பயிற்சிகள் எதையும் அளிக்கவில்லை என்று ஸ்ரீநிதியின் தாய் சுஜா கூறியுள்ளார்.

போட்டிகளில் ஆர்வம்
மூன்று வயதிலேயே பல்வேறு நாட்டின் கொடிகளை பார்த்தவுடன் கூறும் திறன் படைத்தவராக ஸ்ரீநிதி விளங்கினார். சிறு வயதில் இருந்தே போட்டிகளில் கலந்து கொள்வதில் ஸ்ரீநிதி ஆர்வமாக இருந்ததாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

புத்திசாலிக்குழந்தை
ஸ்ரீநிதி, தற்போது 11 வயதில் இங்கிலாந்தில் நடைபெற்ற புத்திசாலிக் குழந்தை போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

பிபிசி எடிட்டர்
புத்திசாலிக்குழந்தை ஸ்ரீநிதியின் திறமையைக் கண்டு வியந்துள்ள பிபிசியின் பிஸினர் எடிட்டர் ராபர்ட் பெஸ்டன், தன்னை சந்திக்க வருமாறு ஸ்ரீ நிதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications